பிரசத்தி பெற்ற நேக்டூ ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலான கேடிஎம் நிறுவனத்தின் 390 டியூக் விலையை அதிரடியாக ரூ.18,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதால்,புதிய விலை ரூ.2.95 லட்சம் எக்ஸ்-ஷோரூம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக டிரையம்ப் ஸ்பீடு T4 மாடலின் விலை ரூ.18,000 வரை குறைக்கப்பட்டு ரூ.1.99 லட்சத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
390 டியூக் மாடலில் 46 hp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு ஆறு வேக கியர்பாக்ஸ் பெறுகின்றது. கூடுதலாக, ஸ்லிப்ப்பர் அசிஸ்ட் கிளட்ச் உடன் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.
அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனை பெற்று அப் சைடு டவுன் ஃபோர்க் உடன் ல்இடி ஹெட்லைட்டை பெற்று முன்புறத்தில் 320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் பின்புற 240 மிமீ டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்றது.
5 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் லான்ச் கன்ட்ரோல் மற்றும் ரைடிங் முறைகள் (ஸ்டீரிட், ரெயின் மற்றும் ட்ராக்) ஆகியவற்றைப் பெறுகிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அழைப்பு மற்றும் இசை கட்டுப்பாடு போன்ற பிற அம்சங்களும் கிடைக்கின்றன.
மேலும் படிக்க – 2025 கேடிஎம் அட்வென்ச்சர் 390 விபரம் அறிந்து கொள்ளலாம்