Career: 12-ம் வகுப்பில் 'இந்தப்' பிரிவு படித்திருந்தால் கடலோர காவல் படையில் பணி!

இந்திய கடலோர காவல் படை பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

பொது மற்றும் டொமஸ்டிக் கிளையில் நாவிக் பணி. நாவிக் என்றால் கடலோர காவலாளர்.

மொத்த காலி பணியிடங்கள்: 300

வயது வரம்பு: 18 – 22 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.21,700

கடலோர காவல் படையில் பணி!
கடலோர காவல் படையில் பணி!

கல்வி தகுதி:

பொது கிளை நாவிக் பணிக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடம் படித்ததோடு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டொமஸ்டிக் கிளை நாவிக் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: இந்தப் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cgept.cdac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 25, 2025.

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.