முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ஒன்றிணைத்து, புதிய ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு பெரிய OTT தளங்கள் இணைந்த JioHotstar குறைந்த கட்டணத்திலான OTT இயங்குதளமாக உருவெடுத்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் செயலி
Jio மற்றும் Hotstar இணைந்ததால் மற்ற OTT தளங்கள் பாதிக்கப்படலாம். ஏனெனில் ஜியோ ஹாட்ஸ்டாரின் மாதாந்திர சந்தா மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. இந்த இணைப்பைத் தொடர்ந்து ஜியோ சினிமா பயனர்கள், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயனர்கள் இனி, ஜியோ ஹாட்ஸ்டார் செயலியை பயன்படுத்தலாம்.
JioHotstar திட்டங்களுக்கான கட்டணம்
மொபைல் திட்டம்: ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் சந்தா திட்டங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் மலிவான திட்டம் மொபைல் பயனர்களுக்கானது. ஒரு சாதனத்தில் வேலை செய்யும் திட்டம் மூன்று மாதங்களுக்கு ரூ.149 என்ற கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது, அதாவது மாதத்திற்கு ரூ. 50 (30 நாட்களுக்கு தினசரி ரூ. 1.66), இதில் 720 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட திட்டத்தைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் வீடியோவைப் பார்க்கும் போது இடையில் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. ஓராண்டுக்கான திட்டத்தை வாங்கினால் ரூ.499 அதாவது மாதச் செலவு ரூ.42 மட்டுமே.
ஜியோ சூப்பர் டிவி திட்டம்
ஜியோ ஹாட்ஸ்டாரின் இந்த திட்டம் ரூ.299 விலையில் மூன்று மாதங்களுக்கு கிடைக்கிறது, அதாவது மாதம் ஒன்றுக்கு ரூ.100 செலவாகும். இந்த திட்டதை 1 வருடத்திற்கு காலத்திற்கு பெற்றுக் கொண்டால், கட்டணம் ரூ.899. அதாவது ஒரு மாதத்திற்கான செலவு ரூ.75 ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம், 2 சாதனங்களில் (டிவி, மொபைல் அல்லது லேப்டாப்) 1080 பிக்சல் தெளிவுத்திறன் கொண்ட உள்ளடக்கத்தைப் பார்க்க முடியும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டமும் விளம்பரம் கொண்டது, அதாவது நீங்கள் வீடியோக்களுக்கு இடையில் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும்.
JioHotstar பிரீமியம்
ஜியோ ஹாட்ஸ்டாரின் மூன்று மாத பிரீமியம் திட்டத்திற்கான கட்டணம் ரூ.499. அதாவது இந்த திட்டத்திற்கு மாதந்தோறும் ரூ.166 செலவாகும். நீங்கள் ஒரு வருடத்திற்கு இந்த திட்டத்தை வாங்கினால், நீங்கள் ரூ.1499 செலவழிக்க வேண்டும், அதாவது ஒவ்வொரு மாதமும் செலவு ரூ.125 ஆக இருக்கும். இந்தத் திட்டம் 4 சாதனங்களை (டிவி, லேப்டாப், மொபைல்) ஆதரிக்கிறது, விளம்பரங்கள் இருக்காது. டால்பி விஷன் மற்றும் 4K தெளிவுத்திறன் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது.
நெட்ஃபிக்ஸ் திட்டங்களுக்கான கட்டணம்
Netflix மாதாந்திர திட்டம் ரூ.149 கட்டணத்தில் கிடைக்கிறது. 30 நாட்களுக்கு செலுபடியாகும் இந்த திட்டத்தின் தினசரி செலவு ரூ.4.96 ஆக இருக்கும். நிறுவனம் இந்த கட்டணத்தில் மொபைல் திட்டங்களை வழங்குகிறது.