மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி பிரெஸ்ஸா 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் 6 ஏர்பேக்குகளை அடிப்படையான பாதுகாப்பாக அனைத்து வேரியண்டிலும் இணைத்து ரூ.8.54 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
2025 Maruti Suzuki Brezza
இந்திய சந்தையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களான கியா சிரோஸ், டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ஸ்கோடா கைலாக் மற்றும் மஹிந்திரா XUV 3XO, நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளுகின்றது.
தொடர்ந்து பிரெஸ்ஸாவில் K15C 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் சிஎன்ஜி பயன் முறையில் 88 hp மற்றும் 122 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் என்ஜின் 103 hp மற்றும் 136 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு உள்ளது.
. பிரெஸ்ஸா சிஎன்ஜி 25.51 கிமீ ஒரு கிலோ எரிபொருளுக்கு வழங்கும் நிலையில், பெட்ரோல் மேனுவல் லிட்டருக்கு 17.80 கிமீ, ஸ்மார்ட் ஹைபிரிட் உள்ள மேனுவல் லிட்டருக்கு 19.89 கிமீ மற்றும் ஆட்டோமேட்டிக் லிட்டருக்கு 19.80 கிமீ
டாப் வேரியண்டில் ஸ்மார்ட்பிளே Pro+ அமைப்புடன் கூடிய 7.0-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன், சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களை பெறுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான மாருதி சுசூகி பிரெஸ்ஸா விலை ரூ.8.54 லட்சம் முதல் ரூ.13.98 லட்சம் வரை அமைந்துள்ள காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ஹீல் ஹோல்டு அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் ரிவிர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளது.