தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் இளம் புயல்கள் அனைவரும் புரோமோஷன் பணிகளில் பரபரப்பாக சுற்றி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் ராமாபுரத்திலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியிலும் ஒரு புரோமோஷன் நிகழ்வு நடைபெற்றது. இத்திரைப்படத்தில் நடித்துள்ள அனிகா சுரேந்திரன், பவிஷ் நாராயண், ரபியா, வெங்கடேஷ் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி மாணவர்கள் உற்சாகத்துடன் `கோல்டன் ஸ்பாரோ’ பாடலுக்கு நடனமாடி ரோஸ் கொடுத்தும் படக்குழுவினரை வரவேற்றனர்.
முதலில் பேசிய நடிகை அனிகா, ” நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துல என்னோட ரோல் ரொம்ப யதார்த்தமாகவுன் அழகாகவும் இருக்கும். ரொம்பவே ஜாலியான படம்.” என்றார்.
அடுத்ததாக பேச வந்த படத்தின் கதாநாயகனான பவிஷிடம் `ஹீரோவாக பண்ற முதல் படத்திலேயே இரண்டு ஹீரோயின், நிறைய இடங்களில் படம் ரொம்ப உங்களோட நிஜ வாழ்க்கையோட கனெக்ட் ஆனதுன்னு சொல்லியிருக்கீங்களே’ என தொகுப்பாளர் கேட்டதற்கு, “இந்த கேரக்டர் நான் மட்டுமில்ல எனக்கு தெரிஞ்சு எல்லாருமே கனெக்ட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். ஏன்னா காதல் தோல்வி எல்லாருக்குமே நடந்திருக்கும். அதுனால கண்டிப்பா எல்லாருமே கனெக்ட் பண்ணிக்கமுடியுற ஒரு படமாகதான் தான் இருக்கும்” என்றார்.
இவரை தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் வெங்கடேஷ், “தனுஷ் சார், ஆக்க்ஷன்- கட், இந்த ரெண்டு விஷயங்களுக்கு நடுவுலதான் கொஞ்சம் சீரியஸாக இருப்பாரு. ஒரு காட்சிக்கு கட் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் ஜாலியா கலாய்ச்சிட்டு பேசிட்டிருப்பாரு. என்கிட்ட ‘டைம் இஸ் மணி’ னு சொல்லிட்டே இருப்பாரு. அவர் வேகமா வேலை செய்யக்கூடிய இயக்குநர். அவர்கிட்ட இருந்து வேகமான மேக்கிங் பிராசஸ் கத்துக்கலாம்” என்றார்.
“முதல் படம் தனுஷ் சார் இயக்கத்துல பண்றது சந்தோஷமான விஷயம். அவருக்கு நடிப்புல நிறைய அனுபவம் இருக்கு. அவர் படத்துல நடிக்கிற நடிகர்களுக்கு எப்படி சொல்லிக்கொடுத்தா சரியா இருக்கும், எப்படி அவங்கள சௌகரியமா வச்சுகணும்னு பார்த்து பார்த்து பண்ணுவார். எங்களுக்கு ரொம்பவே ஜாலியா இருந்தது. தனுஷ் சார் கூட வேலை செஞ்சதுக்கு நாங்க குடுத்து வச்சுருக்கனும்னு நினைக்கிறேன்.” என்றார் நடிகை ரபியா.
இதனை தொடர்ந்து படக்குழுவினரிடம் மாணவர்கள் பிக் லைன்களை அள்ளிவிட கலகலப்பாக நிறைவு பெற்றது இந்த ப்ரோமோஷன் நிகழ்வு!