இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புட்ச் விலோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ளனர்.
8 நாள் பயண திட்டத்துடன் விண்வெளி நிலையத்திற்கு சென்ற இருவரும் தற்போது வரை மீட்கப்படவில்லை. அவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த டிராகன் விண்கலன் மூலம் மார்ச் 19-ம் தேதி அன்று அங்கிருந்து அவர் புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.