மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில், அதை தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் , கள்ளச்சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது அந்த பகுதி மக்களிடைய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்கள், கொலை சம்பவங்கள், கள்ளச்சாராயம் விற்பனை போன்றவற்றால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி யாகி உள்ளது. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதபடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் […]
