காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவாங்கி இருக்கிறார்.
அப்பெண் காதலர் தினத்தன்று தனது காதலனுக்கு ஆன்லைனில் பீட்ஸா ஆர்டர் செய்தார். ஒன்று, இரண்டு அல்ல. மொத்தம் 100 பீட்ஸாக்களை தொடர்ச்சியாக ஒரே நாளில் ஆர்டர் செய்தார். ஆனால் ஆர்டர் செய்யப்பட்ட பீட்ஸாக்களுக்கு அப்பெண் பணம் கொடுக்கவில்லை. கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை பயன்படுத்தி உள்ளார். யாஷ் சங்க்வி என்ற வாலிபர் முதலில் ஒரு பீட்ஸா வந்தவுடன் யார் ஆர்டர் செய்தது என்று ஆச்சரியம் அடைந்தார். பீஸ்ஸாவை கொண்டு வந்த நபர் பீட்ஸாவிற்கு பணம் கொடுக்கும்படி கேட்டபோதுதான் யாஷ் அதிர்ச்சியடைந்தார். மேலும் ஒரு பீட்ஸாவோடு அது நிற்கவில்லை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/istockphoto-1442417585-612x612.jpg)
தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. அதனை பார்த்து யாஷ் அதிர்ச்சியடைந்தார். எந்த பீட்ஸாவிற்கும் அதனை ஆர்டர் செய்தவர் பணம் கொடுக்கவில்லை. அதனை யார் ஆர்டர் செய்தது என்று விசாரித்தபோதுதான், அவரது முன்னாள் காதலி என்று தெரிய வந்தது. அவரின் முன்னாள் காதலி தனது மாஜி காதலனை பழிவாங்க இது போன்று ‘கேஸ் ஆன் டெலிவரி’ முறையில் பீட்ஸாவை ஆர்டர் செய்திருந்தார். இது தொடர்பான செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதும் நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட பெண்ணை திட்டித்தீர்த்தனர்.
சிலர் பழிவாங்குவதற்காக இது போன்று அனுப்பி இருப்பதாக சிலர் தெரிவித்தனர். சிலர் இந்த அளவுக்கு அதிகப்படியான பீட்ஸாக்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர். இது விளம்பரப்படுத்தும் யுக்தி என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சிலர், இது உணவை வீணாக்கும் செயல் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதே போன்று மற்றொரு பெண் தனது முன்னாள் காதலனுக்கு ஸ்விக்கி மூலம் குப்பை பைகளை அனுப்பி இருக்கிறார். அதில் ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பி இருக்கிறார். அதில், “இன்ஸ்டாமார்ட்டிலிருந்து அனுப்பினேன், அதை அன்புடன் அணியுங்கள். அது பொருந்தவில்லை என்றால், எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் உங்களுக்கு பெரியவற்றை அனுப்புவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்படி ஒருவர் உங்களுக்கு செய்தால், உங்கள் ரியாக்ஷன் என்ன? கமெண்ட் ப்ளீஸ்..!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Velpari-Play.png)