மார்ச் 22ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2025! முதல் போட்டி யாருக்கு தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) 18வது பதிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. முதல் போட்டி வரும் மார்ச் 22ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றதால் கொல்கத்தாவில் முதல் போட்டி நடைபெறுகிறது. மேலும் ஹைதராபாத் மைதானத்தில் குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் நடைபெறும் என்றும், குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

ஐபிஎல் 2025 அட்டவணை

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளதால் ஐபிஎல் 2025 அட்டவணையை பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது மைதானங்கள் மற்றும் ஐபிஎல் அணிகளுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியை தொடர்ந்து இரண்டு போட்டியில் கடந்த ஆண்டு ரன்னர்-அப் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாட உள்ளனர். முன்னதாக மும்பையில் நடந்த விழாவில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என தெரிந்து இருந்தார்.

ஐபிஎல் மெகா ஏலம்

கடந்த ஆண்டு சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே, ஜிடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 10 அணிகளும் தங்களது வேண்டிய வீரர்களை எடுத்துள்ளனர். 10 அணிகளும் முற்றிலும் புதிய தோற்றத்துடன் இந்த ஆண்டு ஐபிஎல்லை அணுக உள்ளனர். இதனால் சுவாரசியம் அதிகரித்துள்ளது.

ஐபிஎல் 2025 போட்டிகள் நடைபெறும் இடங்கள்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம்
மும்பை வான்கடே மைதானம்
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம்
பெங்களூரில் உள்ள எம் சின்னஸ்வானி ஸ்டேடியம்
லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியம்
முல்லன்பூர் ஸ்டேடியம்
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம்
ஜெய்ப்பூரில் உள்ள ஸ்வாய் மான் சிங் மைதானம்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியம்
குவஹாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியம்
தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.