தோகா,
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோகாவில் உள்ள கலீபாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமண்டா அனிசிமோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெலினா ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
Related Tags :