கின்ஷாசா,
மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு, கிழக்கு பகுதியில் ருவாண்டா நாட்டுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. நாட்டின் கனிம வளங்கள் நிறைந்த சொர்க்கப்பூமியாக எல்லை பகுதியில் அமைந்துள்ள வடக்கு கிவூ, தெற்கு கிவூ உள்ளிட்ட மாகாணங்கள் விளங்குகிறது.
இதனால் அங்கு சுரங்கங்கள் தோண்டி காங்கோ ஜனநாயக குடியரசு அரசாங்கம் கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகிறது. இந்தநிலையில் ருவான்டா நாட்டின் ஆதரவு கொண்ட எம்-23 என்ற கிளர்ச்சியாளர்கள் குழு இந்த பகுதிகளை சுற்றி வளைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்தது. இதனால் கடந்த மாதம் தொடங்கி அங்கு தொடா் வன்முறை ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தெற்கு கிவூ நகரை எம்-23 கிளர்ச்சியாளர்கள் குழுவினர் சுற்றி வளைத்து கைப்பற்றினர். அந்த மாகாணத்தின் முக்கியமான நகரமான புகாவு நகரை கைப்பற்றி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். முன்னதாக அங்குள்ள தேவாலயத்திற்குள் பதுங்கி இருந்து செயல்பட்டு வந்த காங்கோ ராணுவ வீரா்கள் குறித்து அறிந்த கிளர்ச்சியாளா்கள் குழுவினர் அங்கு சென்று சரமாாி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 70 பேர் சுட்டு கொல்லபட்டனர்.