2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் இன் 18 வது சீசன் மே 25 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. அதேமாதிரி, சென்னை அணியின் முதல் இரண்டு போட்டிகளுமே பரபர போட்டிகளாக அமையவிருக்கிறது. சென்னை அணி தனது முதல் லீக் போட்டியிலேயே மும்பை அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. அதேமாதிரி அடுத்தப் போட்டியில் பெங்களூரு அணியை மார்ச் 28 ஆம் தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.
அதேமாதிரி, மும்பை அணி தங்களின் முதல் ஹோம் மேட்ச்சை மார்ச் 31 ஆம் தேதிதான் ஆடுகிறது. 31ஆம் தேதி கொல்கத்தா அணியை வான்கடேவில் மும்பை அணி எதிர்கொள்கிறது. பெங்களூரு அணி தங்களின் முதல் ஹோம் கேமை ஏப்ரல் 2 ஆம் தேதிதான் ஆடுகிறது. குஜராத்துக்கு எதிரான அந்த ஆட்டம் சின்ன்சாமி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.



ப்ளே ஆப்ஸ் சுற்று போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மே 20 ஆம் தேதி குவாலிபையர் 1, மே 21 ஆம் தேதி எலிமினேட்டர், மே23 ஆம் தேதி குவாலிபையர் 2, மே 25 ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் ஹைதராபாத்திலும் குவாலிபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவிலும் நடக்கவிருக்கிறது.