வாஷிங்டன்,
அமெரிக்காவின் மத்திய கிழக்கு மாகாணங்களான கென்டகி, வா்ஜீனியா, மேற்கு வா்ஜீனியா, டென்னசி, ஆா்கன்சாஸ் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக அங்கு வெள்ள பாதிப்பு எற்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வாகனங்கள் நீரில் மூழ்கின
மண்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது கென்டகி மாகாணம் முழுவதும், மேற்கு வா்ஜீனியாவின் 10 பகுதிகளிலும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மிசிசிப்பி, ஓஹியோ ஆகிய அண்டை மாகாணங்களிலும் திடீா் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Related Tags :