சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான முழு போட்டி அட்டவணை இன்று வெளியாகியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளன. மொத்தம் 74 ஆட்டங்கள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மார்ச் 23-ம் தேதி மோதுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை:-
1. மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், சென்னை
2. மார்ச் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
3. மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், கவுகாத்தி
4. ஏப்ரல் 5: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை
5. ஏப்ரல் 8: பஞ்சாப் கிங்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ், சண்டிகர்
6. ஏப்ரல் 11: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
7. ஏப்ரல் 14: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
8. ஏப்ரல் 20: மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
9. ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை
10. ஏப்ரல் 30 சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ், சென்னை
11. மே 3: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
12. மே 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
13. மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
14. மே 18: குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்