திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: புதிய நிபந்தனை விதிப்பு

திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு புதியநிபந்தனைகள் விதிக்கப்பட் டுள்ளன. திருப்​ப​தி​யில் அலிபிரி மலைப்​பாதை​யில் தற்போது சிறுத்​தைகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்த தேவஸ்​தானம், பக்தர்​களுக்கு புதிய நிபந்​தனைகளை விதித்​துள் ளது. அதன்​படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரைமலையேறி செல்​லும் பக்தர்​களுக்கு எவ்வித நிபந்​தனை​யும் இல்லை. மதியம் 2 மணிக்கு பிறகு, 70 முதல் 100 பேர் கொண்ட பக்தர்கள் கூட்​டம், கூட்​டமாக அனும​திக்​கப்​படு​கின்​றனர். மேலும் இவர்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே அனும​திக்​கப்​படு​கின்​றனர். இந்த கும்​பலில் 12 வயதுக்​குட்​பட்​டோருக்கு கண்​டிப்பாக அனு​மதி இல்​லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.