இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் சிந்த பகுதியில் நடைபெறும் மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இருவேறு இடங்களில் நடந்த விபத்து சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாகவும், 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், கயிர்பூர் மாவட்டத்தில் உள்ள ராணிபூர் பகுதி அருகே பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 35 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.