Retro:“200 அகல் விளக்குகளை வைத்து அந்தக் காதல் காட்சியை எடுத்தோம்''- காமிக்கில் கதை சொல்லும் குழு

சூர்யாவின் `ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் முக்கிய காட்சிகளை படம் பிடித்த விதம் குறித்து காமிக் வடிவில் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் பதிவிட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு டீசர் உருவான விதத்தை காமிக் வடிவில் சொல்லியிருந்தார்கள். தற்போது டீசரில் இடம்பெற்றிருந்த முக்கிய காதல் காட்சியை படம் பிடித்தவிதம் பற்றிப் பதிவிட்டிருக்கிறார்கள்.

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் காமிக் வடிவிலான அந்தப் பதிவில், “ நாங்கள் வாரணாசியை அடைந்ததும் அங்கு இரண்டு காட்சிகளை படம் பிடிக்க வேண்டியிருந்தது. அதில் ஒரு காட்சி பெரிய நடிகர்களை வைத்து எடுக்க வேண்டியிருந்தது. மாலை வெளிச்சத்தில் ஒரு காட்சியை எடுத்து முடித்துவிட்டு அன்றைய நாள் படப்பிடிப்பை முடிக்கவிருந்தோம். ஆனால், விதியிடம் வேறு ஒரு திட்டமிருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட முதல் நாள் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமானது. அந்த சமயத்தில் சூர்யா சாரும் வந்துவிட்டார். நேரத்தைத் தாண்டி படப்பிடிப்புச் சென்றது. அப்போது எங்களின் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ், “ இரவு நேர படப்பிடிப்புக்கு நாம் கூடுதலான லைட்கள் கொண்டு வரவில்லை. நாம் முதலில் பகல் நேர படப்பிடிப்பிற்குதான் திட்டமிட்டிருந்தோம்.

அதனால் கொண்டு வரவில்லை.” என்றார். அதன் பிறகு ஒரு அற்புதமான ஐடியாவுடன் அவர் வந்தார். 100 முதல் 200 அகல்விளக்குகளை வைத்து லைட்டிங் செட் அப் செய்தார். எப்போதும் போல சூர்யா சார் அமைதியாக வந்தார். வசனங்களைப் பார்த்துவிட்டு அந்தக் கதாபாத்திரமாகவே மாறி ஒரே டேக்கில் அந்தக் காட்சியை முடித்துவிட்டார். பூஜா மேமின் எமோஷனல் ரியாக்‌ஷன்கள் காட்சிக்கு ஆழத்தைச் சேர்த்தது. இந்த மாலை நேரக் காட்சியின் படப்பிடிப்பு முடிவதற்கு இன்னும் தாமதமாகும் என நினைத்தோம். ஆனால், 7 மணிக்கு முன்பே அந்தக் காட்சியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எங்கள் தொழில்நுட்பக் குழுவின் இந்த உடனடி யோசனைக்கு நன்றி. இப்படிதான் படத்தின் டீசரில் வரும் அந்தக் காதல் காட்சி உருவானது.” எனப் பதிவிட்டிருக்கிறார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.