இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு ‘மதராசி’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். `மான் காராதே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஷங்கர் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதே என்னுடைய கனவு எனக் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கனவு எஸ். கே-வுக்கு நிறைவேறி இருக்கிறது. அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், `டான்சிங் ரோஸ்’ ஷபீர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகை ருக்மினி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/ParthibanKanavuAudioBook
