updated 2025 Renault Kiger get features – 2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி முக்கிய மாற்றங்கள்..!

மேக்னைட் உட்பட காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள மாடல்களை எதிர்கொள்ளுகின்ற ரெனால்ட் கிகர் எஸ்யூவியின் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் கூடுதல் வசதிகளுடன் விலை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2025 Renault Kiger

RXE, RXL, RXT (O), மற்றும் RXZ என நான்கு விதமான வகைகளில் கிடைக்கின்ற கிகர் மாடலில் தொடர்ந்து 1.0 லிட்டர் எனர்ஜி பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – Xtronic CVT 2,200-4,000 rpm) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான முக்கிய மாற்றங்கள்

அனைத்து வேரியண்டுகளிலும் சென்டரல் லாக்கிங் உடன் 4 பவர் விண்டோஸ் கொடுக்கப்பட்டு, நடுத்தர RXL வேரியண்டில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் ஸ்டீயரிங் வீலில் கண்ட்ரோல் சுவிட்சுகள் மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் RXT வேரியண்டில் 15 அங்குல ஃபிளக்ஸி ஸ்டீல் வீல் சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுவாக விலை ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை ஆரம்ப நிலை வேரியண்டுகள் விலை உயர்த்தப்பட்டாலும், டர்போ சிவிடி RXT (O) வேரியண்ட் ரூ.30,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை ரூ.6.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டு, டூயல் டோன் நிறத்தை தேர்வு செய்தால் ரூ.23,000 கூடுதலாக வசூலிக்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.