அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் வேலையின்மை 6.4% ஆக குறைவு

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.4 சதவீதமாக குறைந்துளளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது: நகர்ப்புற பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில் இ்ந்த விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. இருப்பினும், முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது டிசம்பரில் வேலையின்மை விகிதத்தில் எந்தவிதவித மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.4 சதவீதமாகவே நீடிக்கிறது.

2024 அக்டோபர்-டிசம்பரில் நகர்புறங்களில் வேலையின்மை விகிதம் 8.1 சவீதமாக குறைந்த நிலையில் இது 2023 இதே காலகட்டதில் 8.6 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது. 2024 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்த விகிதம் 8.4 சதவீதமாக இருந்தது. இவ்வாறு என்எஸ்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.