இந்திய அணியில் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? அஸ்வின் கொடுத்த அட்வைஸ்

Ravichandran Ashwin | மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 65-வது ஆண்டு விழா கருப்பாயூரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்துகொண்டு, லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது, மதுரை என்றால் பாண்டிய மன்னர்கள்,என் சின்னங்கள் தான் நினைவிற்கு வரும் மீனை பார்க்கும்போது மதுரை தான் தோன்றும். மதுரைய மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து நம் இளைஞர்கள் இந்திய அணிக்காக ஆட வேண்டும். கிரிக்கெட் ஆடினால் பணம் வரும் என்று நினைக்க கூடாது. கிரிக்கெட் ஆடினால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நினைக்க வேண்டும். 

அப்படி நினைத்து தான், நான் விளையாடினேன். கிரிக்கெட் விளையாடி ஐ.பி.எல்லில் நுழைந்து முன்னேற நினைப்பது ஒவ்வொருவருடைய நியாயமான கருத்து. கிரிக்கெட் விளையாட வருபவர்கள் வெற்றி பெறுவோம், அடுத்தக்கட்டத்திற்கு செல்வோம் என நினைக்க வேண்டும். கிரிக்கெட்டை நம்புங்கள், சந்தோசம் கிடைக்கும். கிரிக்கெட் விளையாட்டு என்பது வரவு-செலவு கணக்கு பார்க்கும் இடம் அல்ல. அப்படி நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். கிரிக்கெட்டில் அரசியல் இருக்கிறது என நினைத்தால் அது உங்களுடைய தவறு. விளையாட்டு ஒன்றே குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும் என்றார். 

ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நாம் இறக்கும்போது நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் ட்ரைலராக ஓடும் எனக் கூறுவார்கள். அப்படி எனக்கும் சில விஷயங்கள் நிச்சயமாக ஓடும் என்ற நம்புகிறேன் நான் விளையாடிய போட்டிகளின் வெற்றி தோல்வி என் மனதில் ஓடுமா என்ன தெரியவில்லை ஆனால் என் சிறுவயதில் என் தந்தை என்னை அதிகாலையில் பயிற்சிக்கு பைக்கில் அழைத்துச் சென்ற நினைவுகள் நிச்சயம் வரும்.

அதேபோல ஒரு முறை நான் ஸ்கூலில் கிரிக்கெட் விளையாடிய போட்டியில் தொடர்ச்சியாக தவறான பாள்களை போட்டுக் கொண்டிருந்தேன் அப்போது எனது ஆசிரியர் என்னை கண்டித்தார் ஒரு வழியாக அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம், அந்த வெற்றி நிகழ்வு எனக்கு வருமா என்று தெரியாது ஆனால் என் ஆசிரியர் என்னை பிச்சிருவேன் என்று சொன்ன வார்த்தை நிச்சயம் நினைவிற்கு வரும் என்று நம்புகிறேன் என கூறினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.