சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட கடிவாளம்! ஒரு குட் நியூஸூம் இருக்கு

Champions Trophy 2025 News | பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 பிப்ரவரி 19 ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது. இந்த மிகப்பெரிய போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருவிதிமுறை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இது கடிவாளம் போடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். என்ன மாற்றத்தை பிசிசிஐ கொண்டு வந்திருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

சாம்பியன்ஸ் டிராபி 2025

ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஐசிசி நடத்தும் மிகப்பெரிய போட்டி என்றால் அது சாம்பியன்ஸ் டிராபி  தொடர். இந்தமுறை பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. இதற்காக அந்த நாடு பாகிஸ்தானில் விரிவான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் செல்லவில்லை. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் மைதானத்தில் நடக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இல்லாததால் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை அந்த அணிகள் ஆடவில்லை. 

இந்திய அணிக்கு கட்டுபாட்டுகள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் துபாய் சென்றுவிட்டது. அங்கு பயிற்சியையும் தொடங்கிவிட்டது. இம்முறை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியில் உள்ள பிளேயர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனைத்து பிளேயர்களுக்கு அணி நிர்வாகத்தின் பேருந்தில் மட்டுமே வர வேண்டும். எந்த பிளேயரும் தனி வாகனம் வைத்துக்கொள்ளக் கூடாது. பயிற்சிக்கு உரிய நேரத்தில் ஆஜராக வேண்டும். முக்கியமாக மனைவிகளை வீரர்கள் உடன் அழைத்து செல்ல அனுமதியில்லை என்பது உள்ளிட்ட கடுமையான விதிகளை பிசிசிஐ விதித்துள்ளது. 

பிசிசிஐ ஆஃபர் என்ன?

அதேநேரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே ஒரு ரிலாக்ஷேஷன் மட்டும் கொடுத்திருக்கிறது. மனைவியை ஒரு போட்டிக்கு மட்டும் உடன் அழைத்துச் செல்லலாம் என கூறியுள்ளது. ஆனால், அது குறத்து பிசிசிஐ-க்கு முறையாக விளக்கி அனுமதி கேட்க வேண்டும் என கூறியுள்ளது. அப்படி செய்தால் பிளேயர்கள் தங்களின் மனைவியை உடன் அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதி கொடுப்பது பரிசீலித்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது.

பிசிசிஐ கட்டுப்பாடுகள் ஏன்?

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து மும்பையில் தீவிர ஆலோசனை செய்த இந்திய கிரிக்கெட் வாரியம் பிளேயர்களின் நடத்தைகள் மீது எழுப்பப்பட்ட புகார்கள் குறித்து கவனத்தில் கொண்டது. இதனைத் தொடர்ந்தே பிளேயர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மனைவியை உடன் அழைத்துச் செல்லக்கூடாது, எல்லா பிளேயர்களும் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.