திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த மகாராஷ்டிர முதல்வர்

திருமலை: திருப்​ப​திக்கு சுற்றுப்​பயணமாக வந்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னா​விஸ் நேற்று திரு​மலைக்கு சென்​றார்.

அவரை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் மற்றும் அதிகாரிகள் வரவேற்​றனர். அதன் பின்னர், அவர் ஏழுமலை​யானை தரிசனம் செய்​தார். பின்னர் அவருக்கு கோயி​லில் உள்ள ரங்கநாயக மண்டபத்​தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது. இதேபோன்று, திருச்​சானூர் பத்மாவதி தாயாரை​யும்
பட்னா​விஸ் நேற்று தரிசித்தார். அவருக்கு அதிகாரிகள் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கிகவுர​வித்​தனர். இவருடன் தேவஸ்தான அறங்​காவலர் குழு உறுப்​பினர்கள் பானு பிரகாஷ், சவுரப் ஹெச். போரா ஆகியோ​ரும் உடன் இருந்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.