துணை மேயருக்கு எதிராக கூண்டோடு ராஜினாமா! – கோவை திமுகவில் நடக்கும் குடுமிபிடி

கோவை மண்டலத்தை இம்முறை எப்படியாவது அதிமுக-விடம் இருந்து கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக காய் நகர்த்துகிறார் முதல்வர் ஸ்டாலின், ஆனால், கோவை மாநகராட்சி துணை மேயருக்கு எதிராக திமுக-வினரே கிளப்பும் சர்ச்சைகளைப் பார்த்தால் முதல்வரின் கனவு கனவாகவே போய்விடும் போலிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

கோவை மாநக​ராட்​சி​யின் 92-வது வார்​டானது முன்​னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி​யின் சொந்த வார்டு. சட்டமன்றத் தேர்​தலில் தனது ‘சக்தி’யை திரட்டி கோவை மாவட்​டத்​தின் 10 தொகு​தி​களை​யும் வென்​றெடுத்த வேலுமணி​யால், உள்ளாட்​சித் தேர்​தலில் தனது சொந்த வார்​டில் அதிமுக-வை ஜெயிக்​கவைக்க முடிய​வில்லை.

அவரது வார்​டில் திமுக-​வின் வெற்றிச்​செல்வன் வாகை சூடி​னார். அதனாலேயே அவரை கோவைக்கு துணை மேயராக்​கியது திமுக தலைமை. ஆனால், பதவிக்கு வந்ததும் வெற்றிச்​செல்வன் தனது வார்​டில் இருக்​கும் கட்சி நிர்​வாகிகளை உதாசீனப்​படுத்த ஆரம்​பித்து​விட்​ட​தாகச் சொல்​கிறார்கள் வார்டு நிர்​வாகி​கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்​களில் சிலர், “வேலுமணி​யின் ஆதிக்​கத்தை மீறி வெற்றிச்​செல்வனை ஜெயிக்க வைத்​தோம். அவர் தனக்​குக் கிடைத்த துணை மேயர் பதவியை வைத்து தனது வார்டு மட்டுமின்றி கோவை மாநக​ராட்​சி​யின் அனைத்து வார்​டு​களி​லும் கட்சியை வளர்த்திருக்​கலாம். ஆனால் அதையெல்​லாம் செய்​யாமல், கடந்த 3 ஆண்டு​களில் தன்னை மட்டுமே வளப்​படுத்​திக் கொண்ட அவர், தனது செயல்​பாடு​களால் கட்சிக்​கும் அவப்​பெயரை உண்டாக்கி வருகிறார்.

வார்டு திமுக நிர்​வாகிகளை மதிப்​ப​தில்லை. வாக்​களித்த மக்களை​யும் மதிப்​ப​தில்லை. திமுக-​வினருக்கு டெண்டர் கிடைக்க விடு​வ​தில்லை. அதிமுக-வைச் சேர்ந்த இருவருக்கு மட்டுமே டெண்​டர்களை ஒதுக்​கவைக்​கிறார். உதயநிதி மூலமாக அயலக அணியில் பொறுப்​புக்கு வந்துள்ள டேவிட் சொல்​வது​தான் வெற்றிச் செல்​வனுக்கு இப்போது வேதவாக்கு. இவரது பெயரைச் சொல்லி மாநக​ராட்சி அதிகாரிகளை விரட்டு​கிறார் டேவிட். எங்கள் வார்​டுக்கே சம்பந்​தமில்லாத டேவிட்டை வைத்து எங்களது வார்​டில், எங்களுக்கே தெரி​யாமல் கட்சி நிகழ்ச்​சிகளை நடத்தி எங்களை அவமானப்​படுத்து​கிறார் வெற்றிச்​செல்​வன்.

வெற்றிச்​செல்வன் கோவைக்கு பொறுப்பு மேயராக இருந்த சமயத்​தில் ஒரே ஒரு மாமன்றக் கூட்​டத்தை நடத்​தி​னார். அந்தக் கூட்​டத்​தில் ஒரே மூச்சாக 300 தீர்​மானங்களை நிறைவேற்றி டெண்​டர்களை விட்டு பிரதிபலன் பார்த்​தார். தொடர்ச்​சியாக அவரால் நாங்கள் அவமானப்​படுத்​தப்​பட்​ட​தால் வட்டச் செயலா​ளர், தலைவர், ஒரு துணைச் செயலா​ளர், 3 பிரதி​நி​திகள் மற்றும் 7 பூத்​லெவல் ஊழியர்கள் எங்களது பொறுப்பை ராஜி​னாமா செய்து மாவட்டச் செயலா​ள​ருக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளோம்” என்றனர் விரக்​தி​யுடன்.

இவர்கள் அளித்த ராஜி​னாமா கடிதத்தை ஏற்காத கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி, இருதரப்​பை​யும் சமாதானப்​படுத்​தும் முயற்​சி​யில் ஈடுபட்​டிருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இந்தக் குற்​றச்​சாட்டுகள் தொடர்பாக துணைமேயர் வெற்றிச்​செல்​வனிடம் பேசி​ய​போது, “டெண்டர் விவகாரங்​களில் எல்லாம் நான் தலையிடு​வ​தில்லை. அதுமட்டுமல்​லாமல், டெண்​டர்கள் எல்லாம் ஆன்லைன் மூலமாகத் தான் நடக்​கிறது. மக்கள் பணிகளை நான் தொய்​வின்றி செய்து வருகிறேன்.

மக்கள் பணி செய்​யும் பொழுதெல்​லாம் இவர்​களை​யும் உடன் அழைத்​துச் செல்ல வேண்​டும், தகவல் தெரிவிக்க வேண்​டும் என எதிர்​பார்க்​கின்​றனர். அவர்​களது பல லட்சம் கடனை நான் அடைக்க வேண்​டும் என எதிர்​பார்க்​கின்​றனர். எனது பெயரைச் சொல்லி பொது​மக்​களிடம் வசூலிலும் ஈடுபட்​டனர். இதையெல்​லாம் நான் கண்டித்தது அவர்​களுக்கு பிடிக்க​வில்லை. திமுக-​வினர் யாரும் டெண்டர் எடுக்க வருவ​தில்லை. அதனால் அவர்கள் சொல்​லும் அந்த இருவரும் டெண்​டர்களை எடுக்​கின்​றனர்.

அவர்​களும் தற்போது திமுக-​வில் தான் உள்ளனர். டேவிட் 15 ஆண்டு​களுக்கு மேலாக திமுக-​வில் உள்ளார். அவரை நான் வேலைக்கு வைக்க​வில்லை. தீர்​மானங்கள் நிறைவேற்றுவது என்பது நான் தன்னிச்​சையாக செய்ய முடி​யாது. கவுன்​சிலர்​கள், குழு தலைவர்​கள், மண்டல தலைவர்​கள், ஆணையர் உள்ளிட்​டோர் இணைந்து முடிவு செய்​வது.

என் மீது குற்​றச்​சாட்டு கூறு​பவர்​களின் சட்ட விரோத செயல்​களுக்கு நான் துணை போகவில்லை என்ப​தால் என் மீது அவதூறு பரப்பு​கின்​றனர். தேர்​தல் நெருங்​கு​வ​தால், அ​தி​முக-வுடன் தொடர்பு ​வைத்​துக்​கொண்டு எனக்கு எ​திராக அவதூறு பரப்பு​கின்​றனர். கட்சி தலை​மை​யும், பொறுப்பு அமைச்​சரும் என்னை நம்பி பொறுப்பை ஒப்​படைத்​துள்ளனர். அதை ​நான் ​திறம்பட செய்து வரு​கிறேன்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.