சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு பணி 90% நிறைவு பெற்றுள்ளது. ரூ.80 கோடி மதிப்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவர் நீரூற்று, குறள் மணிமாடம் பணிகள், திருக்குறள் அவையரங்கம், சுற்றுச் சுவர்,தெற்கு நுழைவாயில், புல்தரை அமைத்தல், தீ தடுப்பு வசதி, பெயர் பலகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட […]
