Aprilia Tuono 457 launched – ரூ.3.95 லட்சம் விலையில் ஏப்ரிலியா டுவோனோ 457 வெளியானது

ஆர்எஸ் 457 அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள நேக்டூ ஸ்டைல் பெற்ற ஸ்டீரிட் ஃபைட்டர் டுவோனோ 457 மாடலை இந்திய சந்தையில் ரூபாய் 3.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் ஏப்ரிலியா வெளியிட்டுள்ளது.

இரு மாடல்களும் ஒரே மாதிரியான மெக்கானிக்கல் மற்றும் நுட்படங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற நிலையில் ஃபேரிங் ஸ்டைலை மட்டும் கூடுதலாக ஆர்எஸ் 457 பெறுகின்றது.  457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் மற்றும் 43.5Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸூடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 41mm அப்சைடு டவுன் ஃபோர்க் 120mm பயணிக்கும் வசதியுடன்,  ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130mm பயணத்திற்கான ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 110/70-R17 மற்றும் பின்புறத்தில் 150/60-R17 டயரை பெற்று பிரேக்கிங் முறையில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் , டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோடுகளும் உள்ளது.

தற்பொழுது ஏப்ரலியா ஆர்எஸ் 457 மாடல் ரூ.4.20 லட்சத்தில் கிடைப்பதனால் ரூ.25,000 விலை மலிவாக டூவானோ 457 கிடைக்கின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.