Bison: “வாழ்நாள் அனுபவம், ஆன்மாவை வலிமைப்படுத்தியது.." -துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் சொல்வதென்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வந்த பைசன் (Bison) படத்தின் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் 5-வது திரைப்படம் பைசன் – களமாடன். கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் குறித்து முன்னதாக அவர், “இது படம் உண்மை மற்றும் புனைவு கலந்த கதையாக உருவாகி வருகிறது” எனக் கூறியிருந்தார்.

துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர், பசுபதி, அனுராக் அரோரா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

பைசன் படக்குழு

ஆதித்யா வர்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மகான் படத்தைத் தொடந்து பைசனில் இணைந்தார். இது அவரது கரியரில் முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்லாஸ் எண்டெர்டயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவில், “அத்தனை நாள்களின் அயராத உழைப்பு, அயராத முயற்சிகள் மற்றும் நிலையான ஆதரவு அனைத்தும் எல்லையற்ற உணர்ச்சிகளாக ஒன்றிணைந்துள்ளன” என எழுதியுள்ளார்.

Mari Selvaraj

துருவிக்ரம் தனது சமூக வலைத்தள பக்கங்களில், “சில ஆண்டுகள் தயாரிப்பு, சில மாதங்கள் படபிடிப்பில் இரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி இறுதியில் பைசன் படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்துக்கான தயாரிப்பும் படபிடிப்பும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. என் ஆன்மாவை வலிமைப்படுத்தியதற்காகவும் எனக்கு வாழ்நாள் அனுபவத்தை வழங்கியதற்காகவும் நன்றி மாரி செல்வராஜ் சார்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.