இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி! இந்த விதிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடங்குகிறது. பாகிஸ்தான் அணி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும். காரணம் வீரர்களின் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்துள்ளது. இதனால் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானிலும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

8 அணிகள் விளையாடும் சாம்பியன்ஸ் டிராபி

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் குரூப் Aவில் இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு அணிகளான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா குரூப் Bல் இடம் பெற்றுள்ளன. இன்று கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி பிப்ரவரி 20ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக துபாயில் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது. அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது.

மறுபுறம் ஆஸ்திரேலியா அணி பிப்ரவரி 22ம் தேதி தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மார்ச் 4 மற்றும் மார்ச் 5 தேதி இரண்டு அரையிறுதிப் போட்டிகள் துபாய் மற்றும் லாகூரில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணி தகுதி பெற்றால் துபாயிலும், தகுதி பெறவில்லை என்றால் பாகிஸ்தானிலும் இறுதி போட்டி நடைபெறும். பொதுவாக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும். ஆனால் இந்த முறை 2023 ஒருநாள் உலக கோப்பையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் இடம் பெறவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி வடிவம்

இரண்டு குழுவிலும் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும். பின்னர் அதில் இருந்து 2 அணிகள் இறுதி போட்டியில் விளையாடும். இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறும். சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும். இரண்டாம் இடத்தை பெரும் அணிகளுக்கு 1.12 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும். இதன் மொத்த பரிசுத் தொகை 2017 பதிப்பை ஒப்பிடும் போது 53 சதவீதம் அதிகரித்து $6.9 மில்லியனை எட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.