விண்வெளித்துறையி்ல தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளித்துறையில் இஸ்ரோ தற்சார்பு நிலையை அடைந்து வருகிறது. தற்போது கிரையோஜெனிக் இன்ஜின் உள்நாட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் 10 டன் எடையில் உலகின்மிகப் பெரிய உந்துசக்தி கலவை இயந்திரத்தை இஸ்ரோ வெற்றிகரமாக உருவாக்கியுள்து. இதன் எடை 10 டன். இந்த புதிய சாதனம் பெங்களூருவில் உள்ள மத்திய தயாரிப்பு தொழில்நட்ப மையம்(சிஎம்டிஐ) ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராக்கெட்டில் திட எரிபொருள் உந்துசக்தி முக்கிய பங்காற்றுகிறது. ராக்கெட் மோட்டார் தயாரிப்பில், செங்குத்தான உந்துசக்தி கலவை சாதனம் மிக முக்கியமானது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராக்கெட் மோட்டார்களில் திட உந்துவிசை மிக முக்கியமானது. இவற்றின் உற்பத்திக்கு அதிக உணர்திறன் மற்றும் அபாயகரமான பொருட்களின் துல்லியமான கலவை இயந்திரம் தேவைப்படுகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள 10 டன் எடையுள்ள செங்குத்து கலவை இயந்திரம் உலகிலேயே மிகப் பெரியது. இந்த இயந்திரத்தை முறைப்படி ஒப்படைக்கும் நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள சிஎம்டிஐ மையத்தில் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.
இதை இஸ்ரோ தலைவர் நாராயணன் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர் பெற்றுக் கொண்டார். இந்தியாவின் ராக்கெட் திறனில் இந்த புதிய இயந்திரம் முக்கிய பங்காற்றும்.