ஆடம்பர வசதிகள் மற்றும் ஆஃப் ரோடு சாகசங்கள் என அனைத்திற்கும் ஏற்ற டொயோட்டா நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான லேண்ட் க்ரூஸர் 300 இந்திய சந்தையில் ZX மற்றும் GR-S என இரு விதமான வேரியண்டில் ரூ.2,31,00,000 முதல் ரூ.2,41,00,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள லேண்ட் க்ரூஸர் 300 மாடலை TNGA-F பிளாட்ஃபாரத்தில் வடிவமைத்து லேடர் ஃபிரேம் சேஸிஸ் உடன் 3.3 லிட்டர் ட்வீன் டர்போசார்ஜ்டூ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 304 Hp பவர் மற்றும் 700Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில், 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் பெற்று AWD Integrated Management (AIM) வசதி மூலம் நிகழ்நேரத்தில் சாலையின் தன்மைக்குகேற்ப செயல்படும் வகையிலான நுட்பத்தை கொண்டுள்ளது.
இரண்டு வேரியண்டுகளில் எஞ்சின் உட்பட பல்வேறு வசதிகள் ஒரே மாதிரியாக அமைந்தாலும் டாப் GR-S வேரியண்டில் கூடுதல் GR ஸ்போர்ட் பேட்ஜிங், ஆஃப்-ரோடுக்கு ஏற்ற வகையில் மெருகூட்டப்பட்ட சஸ்பென்ஷன், வித்தியாசமான கிரில், புதிய பம்பர்கள் மற்றும் டார்க் அலாய் ஆகியவை பெற்று கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிற கலவை உள்ள இன்டீரியர் பெறுகின்றது. அடுத்த, ZX வேரியண்டின் பீஜ் மற்றும் கருப்பு நிறத்தை பெற்ற இன்டிரியருடன் உள்ளது. ஆனால் வெளிப்புறத்தில் ஒரே மாதிரியாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தைப் பெறுகின்றது.
Toyota Safety Sense 3.0 என அழைக்கப்படுகின்ற ADAS பாதுகாப்பு தொகுப்புடன் 10 ஏர்பேக்குகளை கொண்டு பல்வேறு உயர்தர பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றதாக லேண்ட் க்ரூஸர் 300 வந்துள்ளது. விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ள இந்த மாடலுக்கான முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது.