OBD-2B ஆதரவு பெற்ற எஞ்சினுடன் கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் உட்பட 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டர் பெற்றதாக 2025 ஆம் ஆண்டிற்கான ஹார்னெட் 2.0 மாடலை ரூ.1.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் ஹோண்டா வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.14,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான சிபி200 எக்ஸ் ரீபேட்ஜிங் மாடலான ஹோண்டா என்எக்ஸ் 200 பைக்கில் உள்ள அதே எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஹார்னெட் 2.0 மாடலில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன் 184.4cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு 8500 RPMல் 16.76hp பவர் மற்றும் 6000 RPM-ல் 15.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் சிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.
கருப்பு, சிவப்பு, கிரே மற்றும் நீலம் என நான்கு விதமான நிறங்களை பெற்றுள்ள 2025 ஹார்னெட்டில் கூடுதலாக பாடி கிராபிக்ஸ் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று புதிய 4.2 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெறுகின்றது. இந்த கிளஸ்ட்டரின் மூலம் புளூடூத் ஆதரவுடன் கூடிய ஹோண்டாவின் ரோட்சிங்க் ஆப் இணைத்தால் டரன் பை டரன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் SMS அறிவிப்புகள் பெறவும் அனுமதிக்கிறது. கூடுதலாக புதிய USB C-வகை சார்ஜிங் போர்ட் உள்ளது.
டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ள 2025 மாடலில் 17 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் 110/70 டயர் மற்றும் பின்புறத்தில் அகலமான 140/70 டயர் கொடுக்கப்பட்டு ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) கொண்டுள்ளது.