செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கு செங்கல்பட்டிருக்கும் இடேயே சிங்கப்பெருமாள் கோயிலில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி வாகன போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ஏ.வ. வேலு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் இதனை நேற்று திறந்து வைத்தனர். 2008ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் பல்வேறு காரணங்களால் தடைபட்ட நிலையில் 16 ஆண்டுகள் கழித்து தற்போது அதன் ஒரு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வாகனங்கள் […]
