Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்… தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் வில் யங், டாம் லதம் ஆகியோர் சதமடித்திருந்தனர்.

ஃபக்கர் ஜமான்

அதைத் தொடர்ந்து, 321 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48-வது ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி, இந்தத் தோல்வியால் நாளை மறுநாள் இந்தியாவுடன் மோதும் போட்டியில் வென்றால்தான் செமி பைனலுக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அதிரடி வீரரான ஃபக்கர் ஜமான் காயம் காரணமாக சாம்பியன்ஸ் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

நியூசிலாந்துடனான போட்டியில் ஃபீல்டிங்கின்போது ஏற்பட்ட காயத்தால் ஃபக்கர் ஜமான் விலகியிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ஃபக்கர் ஜமான். “இதுபோன்ற மிகப்பெரிய தளத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இந்நாட்டின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. அவ்வாறு பாகிஸ்தானை பிரதிநித்துவம் செய்யும் பாக்கியம் எனக்குப் பலமுறை கிடைத்திருக்கிறது.

இருப்பினும், துரதிஷ்டவசமாக சாம்பியின்ஸ் டிராபியிலிருந்து விலகிவிட்டேன். நிச்சயம் அல்லாஹ் சிறந்த திட்டம் வைத்திருப்பார். இது தொடக்கம்தான், கண்டிப்பாக வலுவாக கம்பேக் கொடுப்பேன்.” என்று பதிவிட்டிருக்கிறார். ஃபக்கர் ஜமானுக்குப் பதில் மாற்று வீரராக, இமாம் உல் ஹக்கை பாகிஸ்தான் அணி தேர்வு செய்திருக்கிறது. கடைசியாக, 2017-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராக சதமடித்து, பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.