Google Pay பயனர்கள் கவனத்திற்கு… இந்த சேவைகளுக்கு இனி கன்வீனியஸ் கட்டணம்

இந்தியாவில் பண பரிவர்த்தனைக்கான செயலிகளில், போன்பே , பேடிஎம் , செயலிகளை விட கூகுள் பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். கூகுள் பே செயலி பயன்படுத்த எளிது என்பதும் ஒரு காரணம். இந்நிலையில், கூகுள் பே  பயனர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. UPI முதல் பில் பேமெண்ட் வரை பல சேவைகளை வழங்கும் செயலியான இது இப்போது வாடிக்கையாளர்களின் சுமையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான அனைவரும் பில் பேமெண்ட்டுக்கான கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிய நிலையில், கூகுள் பேயும் பயனர்களிடமிருந்து கன்வீனியன்ஸ் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

சேவைகளுக்கு பணம் செலுத்த வேண்டும்

கூகுள் பே செயலி மூலம் பில் செலுத்துவதற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களிடமிருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தைத் தவிர நீங்கள் ஜிஎஸ்டியையும் செலுத்த வேண்டும். இதுவரை கூகுள் பே பில் பேமெண்ட்டுகளுக்கு பயனர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​​கூகுள் பே கன்வீனன்ஸ் கட்டணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வழங்கவில்லை.

மொபைல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது

கூகுள் பே ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே மொபைல் கட்டணத்தில் பயனர்களிடமிருந்து 3 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணமாக வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மின்கட்டணத்தை செலுத்த வாடிக்கையாளர் ஒருவர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியபோது, ​​அந்த செயலி பயனாளியிடம் இருந்து 15 ரூபாய் வசதிக் கட்டணமாக வசூலித்ததாக ஊடகங்களில் வந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணம் டெபிட்/கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணமாக செயலியில் காட்டப்படுகிறது, இதில் ஜிஎஸ்டியும் அடங்கும்.

UPI பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படுமா?

Google Pay மூலம் UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை, உலகளாவிய சேவை நிறுவனமான PwC வெளியிட்டுள்ள தகவலில், UPI பரிவர்த்தனை செயல்பாட்டில் பங்குதாரர்கள் 0.25 சதவீதத்தை செலவிட வேண்டும். இப்போது இந்த செலவுகளை ஈடுகட்ட, ஃபின்டெக் நிறுவனங்கள் புதிய வருவாய் மாதிரிகளை கடைபிடிக்கின்றன. UPI பரிவர்த்தனை இப்போது வரை முற்றிலும் இலவசம் தான். UPI மீது கட்டணம் விதிக்க பல முறை கோரிக்கை எழுப்பப்பட்டது, ஆனால் இப்போது வரை அரசாங்கம் இதற்கான கட்டணம் விதிக்காமல் இலவச சேவையாகவே வைத்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.