நடிகர் பார்த்திபன் அவ்வபோது சமூக வலைதளப் பக்கங்களி்ல் பல பதிவுகளை பதிவிட்டு வருவார்.
பழைய நினைவுகளைப் பகிர்வது, நய்யாண்டி பதிவுகளை போடுவது என எப்போதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருவார் பார்த்திபன். அப்படி அவருக்கு விஜய்யுடன் உரையாடுவது போன்ற ஒரு கனவு வந்தது என அது குறித்து ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் …..அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/SeenuRamasamyKavithaigal
