ஜெருசலேம்,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. டெல் அவிவ் நகரின் பெட் யாம், ஹொலன் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பஸ்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. பஸ்களில் நிரப்பப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் பஸ்கள் தீப்பற்றி எரிந்தன.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேற்கு கரையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.