துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 51 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சுப்மன் கில் அதில் 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இந்தியா தரப்பில் குறைந்த இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்த வீரர் என்ற தவானின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஷிகர் தவான் 57 இன்னிங்ஸ்களில் 8 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.
அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் – 51 இன்னிங்ஸ்கள்
2. ஷிகர் தவான் – 57 இன்னிங்ஸ்கள்
3. விராட் கோலி – 68 இன்னிங்ஸ்கள்
4. கம்பீர் – 98 இன்னிங்ஸ்கள்
5. சச்சின் – 111 இன்னிங்ஸ்கள்