சாம்பியன்ஸ் டிராபி 2025: கராச்சி வானிலை அறிக்கை.. AFG vs SA ஆடுகளம் யாருக்கு சாதகம்?

ICC Champions Trophy 2025, SA vs AFG: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்களில் குரூப் ஏ-வின் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் பி-யின் போட்டிகள் இன்று (பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமை) முதல் தொடங்க உள்ளன. குரூப் பி-யின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. 

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா மோதல்

ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ப்பதால், அவர்களுக்கு இது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற சமீபத்திய முத்தரப்பு தொடரில் தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, தென்னாப்பிரிக்கா இறுதியாக ஃபார்முக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபடும்.

கராச்சி நேஷனல் பேங்க் ஸ்டேடியம் யாருக்கு சாதகம்?

நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தின் கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் சாதகமாக இருக்கும். மைதானத்தில் பந்து வீசும் போது நல்ல பவுன்ஸ் ஆகும் என்பதால் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஸ்ட்ரோக்குகளை எளிதாக விளையாட முடியும். ஆட்டம் தொடர்ந்து நடக்கும் போது, ​​மைதானம் பேட்டிங்கிற்கான சாதகமான சூழ்நிலையாக மாறக்கூடும். மறுபுறம், புதிய பந்து வீசும் போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

இந்த மைதானத்தஓ பொறுத்த வரை எந்த அணியாக இருந்தாலும், முதலில் பேட்டிங் செய்ய விரும்புவார்கள். கராச்சி மைத்தானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 246 ரன்கள் ஆகும். எனவே இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் கேப்டங்கள் டாஸ் வெல்வத்தில் குறியாக இருப்பார்கள்.

கராச்சி வானிலை முன்னறிவிப்பு

இன்று (பிப்ரவரி 21) கராச்சியை பொறுத்த வரை வானம் மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்ய மூன்று சதவீதம் வாய்ப்பு உள்ளது. பகலில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், இரவில் 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 15 கிமீ வரை இருக்கும், அதிகபட்ச காற்றின் ஈரப்பதம் 48 சதவீதமாக இருக்கும்.

எனவே கராச்சியில் மழை பெய்யாது என்று எதிர் பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான 100 ஓவர்கள் முழு ஆட்டத்தையும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். கராச்சியில் நாள் முழுவதும் 88% மேகமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போட்டி மேகமூட்டமான சூழ்நிலையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அப்டிக்க – Live: கடலூர் செல்லும் ஸ்டாலின்; டிராகன் – NEEK விமர்சனம்; SA vs AFG மோதல் – முக்கிய செய்திகள் இதோ

மேலும் அப்டிக்க – சாம்பியன்ஸ் டிராபி 2025: AFG vs SA போட்டியை எப்போது, ​​எங்கு இலவசமாக பார்க்கலாம்

மேலும் அப்டிக்க – சஹால் – தனஸ்ரீ வர்மா விவாகரத்து உறுதி! நீதிமன்றம் உத்தரவு… மணமுறிவுக்கு என்ன காரணம்?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.