கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, மேற்கு வங்காளத்தில் உள்ள பர்தாவான் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கங்குலியின் காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டது. இதனால் லாரி மீது மோதாமல் இருக்க கங்குலியின் கார் டிரைவர் பிரேக் போட்டதால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கங்குலியின் காருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. பின்னர், கங்குலி அங்கிருந்து புறப்பட்டு சென்று பல்கலைக்கழக நிகழ்வில் கலந்து கொண்டார்.
Related Tags :