தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் மலேசியா வாசுதேவன்.
‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார் இந்த மலேசியா வாசுதேவன். அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்’ என்ற பாடலும் அவரை எட்டா உயரத்துக்கு அழைத்துச் சென்றது. ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய இவர் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி இறந்தார்.

நேற்று அவருக்கு 14-வது ஆண்டு நினைவு தினம். இந்நிலையில் அவரது மகனும், பாடகரும், நடிகருமான யுகேந்திரன் தனது தந்தை மலேசியா வாசுதேவன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “அச்சா, நீங்கள் இறந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உங்களை நினைக்காத நாளில்லை. பல நினைவுகள் இருக்கின்றன.
சில நினைவுகள் என்னை சிரிக்க வைத்திருக்கிறது. சில நினைவுகள் என்னை அழுக வைத்திருக்கிறது. நான் தினமும் உங்கள் பாடல்களைக் கேட்கிறேன். அதைக் கேட்கும்போது சில சமயங்களில் சோகமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் உங்கள் கூட இருப்பதுபோல் அந்தப் பாடல்கள் உணர வைக்கும்.
உங்கள் குரலையும், உங்களுடன் இருந்தபோது கிடைத்த அழகிய தருணங்களையும் நினைத்துக்கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். அப்பா- மகன் உறவைத் தாண்டி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அச்சா” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…