சமீப காலமாக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கார்களில் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் 6 ஏர்பேக்குகளை பெற்று குறைந்த விலையில் துவங்குகின்ற மாடல்களை பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.
ஏர்பேக்குகள் எனப்படுகின்ற SRS Airbags விபத்தின் பொழுது பயணிகளுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நிலையில், இது இரண்டாம் கட்ட பாதுகாப்புதான் முதல் பாதுகாப்பு சீட் பெல்ட் அணிவது தான் கார்களில் மிக முக்கியமான பாதுகாப்பு என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
1. Maruti Suzuki Celerio
இந்தியாவின் குறைந்த விஙையில் 6 ஏர்பேக்குகள், 3 பாயின்ட் சீட் பெல்ட் அனைத்து இருக்கைளுக்கும் பெறுகின்ற மாருதி செலிரியோ காரில் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 67 HP பவர் பெட்ரோல் மற்றும் 56 HP பவர் சிஎன்ஜி என இரு ஆப்ஷனை கொண்டு 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 5.64 லட்சம் முதல் ரூ.7.37 லட்சம் வரை அமைந்துள்ளது.
2. Hyundai Grand i10 Nios
சிறிய ரக சந்தையில் முதன்முறையாக 6 காற்றுப்பைகளை பெற்ற ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் 83hp, 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு மேனுவல், ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் பெட்ரோல் ஆப்ஷனை தவிர பூட்ஸ்பேஸ் பெறும் வகையிலான ட்வீன் சிலிண்டர் சிஎன்ஜி ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ள காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 5.98 லட்சம் முதல் ரூ.8.62 லட்சம் வரை அமைந்துள்ளது.
3. Nissan Magnite
அடுத்து 6 ஏர்பேக்கினை பெற்ற வரிசையில் காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மேக்னைட் எஸ்யூவி விளங்குகின்றது. இந்த மாடலில் 72hp பவர் 1.0 லிட்டர் மேனுவல் மற்றும் ஏஎம்டி, 100hp பவர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல், சிவிடி என இரு எஞ்சின் ஆப்ஷனை கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.12 லட்சம் முதல் ரூ.11.72 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4. Citroen C3
சிட்ரோயன் நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக துவங்குகின்ற சி3 காரில் 82hp பவர் 1.0 லிட்டர் 5 வேக மேனுவல், 110hp பவர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் 5 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரு எஞ்சின் ஆப்ஷனை கொண்டுள்ளது. 6 ஏர்பேக்குகளை பெறுகின்ற இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.16 லட்சம் முதல் ரூ.10.27 லட்சம் வரை கிடைக்கின்றது.
5. Hyundai Exter
சிறிய எஸ்யூவி மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கு போட்டியாக பிரசத்தி பெற்ற டாடா பஞ்ச் உள்ள நிலையில் 6 ஏர்பேக்குகளை பெற்றதாக விளங்கும் எக்ஸ்டரில் சிஎன்ஜி, பெட்ரோல் என இரு ஆப்ஷனை வழங்கும் 83hp பவர், 114Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஸ்யூவி மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 6.21 லட்சம் முதல் ரூ.10.51 லட்சம் வரை அமைந்துள்ளது.