ஜாவா பைக்கின் பிரபலமான 350 மாடலை அறிமுகம் செய்து ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு கூடுதல் ஆக்செரீஸ் பெற்ற சிறப்பு லெகசி எடிசன் மாடலை ரூ.1,98,950 விலையில் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது.
அடிப்படையான டிசைன் மற்றும் மெக்கானிக்கல் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ள ஜாவா 350 லெகசி மாடலில் உயரமான விண்ட்ஷீல்டு, கிராப் ஹேண்டில், கிராஷ் கார்டு. கூடுதலாக, ஒவ்வொரு பைக்கிலும் ஒரு இலவச தோல் சாவிக்கொத்து மற்றும் 350 மினியேச்சர் மாடலும் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இந்த சலுகை முதலில் வாங்கும் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
334cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22.5 hp பவர் மற்றும் 28.1 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் அப்சிடியன் பிளாக், கிரே மற்றும் டீப் ஃபாரஸ்ட், மெரூன், கருப்பு, வெள்ளை மற்றும் மிஸ்டிக் ஆரஞ்சு நிறங்களில் ஸ்போக் மற்றும் அலாய் வீல்களுடன் தொடர்ந்து விற்பனைக்கு கிடைக்கின்றது.