சஃபாரி எஸ்யூவி அறிமுகம் செய்து 27 ஆண்டுகளை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹாரியர் மற்றும் சஃபாரி என இரண்டிலும் மேட் பிளாக் நிறத்தை பெற்ற ஸ்டெல்த் எடிசனில் 2,700 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்ய உள்ளது.
வழக்கமான மாடலை விட ரூ.25,000 முதல் ரூ.45,000 வரை கூடுதலான விலையில் வந்துள்ள சிறப்பு எடிசனுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இன்டீரியர் என சிறிய அளவிலான மாற்றங்களை மட்டும் கொண்டுள்ளது.
இந்த இரு மாடல்களிலும் தொடர்ந்து 170 hp பவர் மற்றும் 350Nm டார்க் வழங்கும் 2.0-லிட்டர் Kyrotec 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு-வேக மேனுவல் அல்லது ஆறு-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
- Harrier Stealth MT – ₹ 25.09 லட்சம்
- Harrier Stealth AT – ₹ 25.49 லட்சம்
- Safari Stealth MT – ₹ 25.74 லட்சம்
- Safari Stealth AT – ₹ 27.14 லட்சம்
- Safari Stealth AT 6Str – ₹ 27.24 லட்சம்
(ex-showroom)
புதிய 19 அங்குல அலாய் வீல் பெற்று பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 360 டிகிரி கேமரா, மற்றும் ADAS சூட் ஆகியவையும் கொண்டு வரப்பட்டுள்ளது.