இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. புது ரெக்கார்டு செய்ய காத்திருக்கும் விராட் கோலி.. இதை செய்தால் போதும்!

Virat Kohli: விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைக்க இன்னும் 15 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அதனை நாளை நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்வாரா? என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கோலி

இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி ஏராளமான சாதனைகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் மற்றொரு சாதனையையும் தற்போது நிகழ்த்த உள்ளார். இன்னும் 15 ரன்கள் மட்டும் எடுத்தால் அவர் ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டி சாதனை படைப்பார். 

இதுவரை அவர் 286 ஒருநாள் போட்டி இன்னிங்ஸ்களில் விளையாடி 13,985 ரன்களை அடித்துள்ளார். 57.78 சராசரியுடன் 50 சதம் மற்றும் 73 அரை சதங்களும் அடித்துள்ளார். இந்த நிலையில், அவர் நாளை (பிப்.23) நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 15 ரன்கள் மட்டும் எடுத்தால் 14,000 ரன்களை எட்டி புதிய மைல்கல்லை அடைவார். முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டி உள்ளனர். 

மேலும் படிங்க: “நாட்டுக்காக விளையாடவில்லை”.. ஸ்டார் பேட்டரை கடுமையாக விமர்சித்த அஸ்வின்!

சச்சின் டெண்டுல்கர் 350வது இன்னிங்ஸில் இந்த 14,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். அதேபோல் குமார் சங்ககாரா, 378 இன்னிங்ஸில்களில் 14,000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டினார். ஆனால் விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அவர் 286 இன்னிங்ஸ்களிலேயே இந்த சாதனையை படைப்பார். இது மிகப்பெரிய உலகச் சாதனையாக இருக்கும். 

ஊக்கமாக அமையும் 

கடந்த 2023ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது அவர் ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதேபோல் இந்த சாதனையையும் அவர் நிகத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபமாக அவரது ஃபார்ம் மிக மோசமாக உள்ளது. இருப்பினும் அவர் 15 ரன்கள் எடுத்து இச்சாதனையை படைக்கும் பட்சத்தில், அது அவருக்கு ஊக்கமாக அமையும்.  

மேலும் படிங்க: பாகிஸ்தானில் “இந்திய தேசிய கீதம்”.. ஷாக் ஆன ஆஸி வீரர்கள்.. லாகூரில் நடந்தது என்ன?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.