காசா முனை,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 2 பேரை ஹமாஸ் இன்று விடுதலை செய்தது. மீதமுள்ளவர்கள் இன்று விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, ஓமர் வெங்கர்ட், ஓமர் ஷெம் டோவ் மற்றும் எலியா கோஹன் ஆகிய 3 பேர் முகமூடி அணிந்தபடி கொண்டு வரப்பட்டனர். அவர்கள் கடத்தப்பட்டபோது, வீரர்களாக இல்லை என்றபோதும், பொய்யாக ராணுவ சீருடை அணிந்தபடி அழைத்து வரப்பட்டனர்.
வெங்கர்ட் மற்றும் டோவ் இருவரும் புன்னகை புரிந்தபடி, கூட்டத்தினரை நோக்கி கையசைத்தனர். கோஹனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எலியா! எலியா! எலியா! என ஆனந்தத்தில் தொடர்ந்து கோஷமிட்டனர்.
இதேபோன்று டோவின் பாட்டி, டோவை பார்த்ததும், உற்சாகத்தில், ஓமர், என்னுடைய மகிழ்ச்சியே! என் வாழ்வே! என குரலெடுத்து கத்தினார்.