தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பீதியை கொடுக்கும் வகையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியதிலிருந்து, BSNL நிறுவனத்திற்கான ஆதரவு பெருகி வருகிறது. பிஎஸ்என்எல் மீண்டும் லாபகரமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், பிஎஸ்என்எல் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது, ஆனால் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்களுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளது.
வெவ்வேறு வேலிடிட்டி கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்கள்
பிஎஸ்என்எல் பட்டியலில் பல்வேறு விதமான பயனர்களுக்கு ஏற்ப வெவ்வேறு வேலிடிட்டி கொண்ட பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில், அதிக கால வேலிடிட்டி கொண்ட பல திட்டங்களை வழங்குகிறது. BSNL கொண்டுவந்துள்ள ரீசார்ஜ் திட்டம் 5 மாத வேலிடிட்டி கொண்ட மிக மலிவான திட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சந்தையில் பரபரப்பை ஏற்படுத்திய BSNL திட்டம்
அரசு நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் ரூ.397 என்ற கட்டணத்திலான மலிவான ரீசார்ஜ் திட்டம் உள்ளது. பிஎஸ்என்எல்லின் இந்த திட்டம் கோடிக்கணக்கான பயனர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதில் இலவச அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற தேவையான அனைத்து வசதிகளையும் நீண்ட கால வேலிடிட்டியுடன் பெறுவீர்கள். BSNL வழங்கும் இந்த ரீசார்ஜ் திட்டம் 150 நாட்கள் நீண்ட வேலிடிட்டியை வழங்குகிறது.
சிம்மை அதிக செலவில்லாமல் ஆக்விட் ஆக வைத்திருக்கலாம்
அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றால், BSNL வழங்கும் இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு பரிசு போன்றது. ரீசார்ஜ் காலவதியான உடனேயே புதிய ரீசார்ஜ் திட்டத்தை எடுக்க விரும்பாத வாடிக்கையாளர்களுக்கும், இரண்டு சிம் உள்ள நிலையில், சிம்மை அதிக செலவில்லாமல் ஆக்விட் ஆக வைத்திருக்க விரும்புபவர்களுக்கும் இந்த மலிவான ரீசார்ஜ் திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில், ரீசார்ஜ் செய்யாமலேயே உங்கள் சிம்மை 150 நாட்களுக்கு எளிதாக ஆக்டிவ் ஆக வைத்திருக்க முடியும். இதில் உங்களுக்கு இலவச அழைப்பும் கிடைக்கும். ஆனால் அதில் வரம்பு உள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.397 திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள்
BSNL ரூ.397 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் முதல் 30 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளிலும் இலவச அழைப்பு சேவையைப் பெறுகிறார்கள். அதாவது, பிஎஸ்என்எல் ரூ.397 திட்டத்தை ரீசார்ஜ் பிறகு, நீங்கள் 30 நாட்களுக்கு மட்டுமே இலவச அழைப்புகளைச் செய்ய முடியும். இதற்குப் பிறகு, வெளிச்செல்லும் அழைப்புகள் நிறுத்தப்படும், ஆனால் உள்வரும் அழைப்புகளின் வசதி 150 நாட்களுக்கு உங்கள் எண்ணில் ஆக்டிவ் ஆக இருக்கும். அதேபோல், முதல் 30 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வழியில் நீங்கள் மொத்தம் 60 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.
அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்கு ஏற்ற திட்டம்
இலவச அழைப்பு மற்றும் டேட்டாவைப் போலவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு முதல் 30 நாட்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. BSNL ஐ இரண்டாம் நிலை சிம்மாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும்.