பிக் பாஸ் தமிழ் சீசன் நான்காவது நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக தேர்வான பாலாஜி முருகதாஸ் தற்போது ‘ஃபயர்’ படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “எனது பர்சனல் விஷயங்களை நான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பதிவிட மாட்டேன். ஆனால் இப்போது ஒரு நல்ல காரணத்திற்காக போஸ்ட் ஒன்றைப் பதிவு செய்கிறேன்.

ஒரு வருடத்திற்கு முன்னாள் விபத்து ஒன்றில் சிக்கிவிட்டேன். என்னுடைய முதுகெலும்பு வீங்கி இருந்தது. அந்த சமயத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னால் 6 மாத காலம் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை ஆலோசித்தேன். ஆனால் எதுவும் சரியாகவில்லை. மிகவும் சோர்வடைந்துவிட்டேன்.
இடுப்பு, கால் வலி இருந்தும் வின்னர் படத்தில் வரும் வடிவேலு மாதிரி நடக்க ஆரம்பித்தேன். திடீரென ஒருநாள் எனக்கு வலி நீங்கிவிட்டதை உணர்ந்தேன். இப்போது நான் நன்றாகவே இருக்கிறேன். எனது ‘ஃபயர்’ படம் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றியை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது. என் மீது கருணை காட்டும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. உன்னை உடைக்கிற நாட்கள்தான் உன்னை உருவாக்கும் நாட்கள்” என்று பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
