இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர்-2 ஆக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை அவர் இந்தப் பதவியில் நீடிப்பார் என்று அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக 6 ஆண்டுகள் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் டிசம்பர் 2024 இல் ஓய்வு பெற்றார். 2019 செப்டம்பர் 11, முதல் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக பி.கே. […]
