கியா இந்தியாவின் பிரபலமான செல்டோஸ் 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்ட வேரியண்ட் உட்பட சில முக்கிய மாற்றங்களை பெற்று ரூ.11.13 லட்சம் முதல் ரூ.20.51 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மற்றபடி, எஞ்சின் ஆப்ஷன் உட்பட டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து செல்டோஸில் 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக ஐஎம்டி மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது.
புதிய 1.5-லிட்டர் VGT டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 113 bhp பவர் மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 6 ஸ்பீடு இன்டெலிஜென்ட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.
115hp 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல், ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.
ஆரம்ப நிலையில் HTE (O) வேரியண்ட் முந்தைய மாடலை விட விலை ரூ.23,000 வரை உயர்த்தப்பட்ட புதிய HTE (O) வேரியண்டில் 16-இன்ச் ஸ்டீல் வீல், புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில்-லேம்ப் கொண்டு 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் பல்வேறு வசதிகளை பெற ப்ளூடூத் ஆதரவுடன், பவர் விண்டோஸ், 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரை பெற்றதாக அமைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
HTK (O) என்ற வேரியண்டில் கூடுதல் வசதிகளாக க்ரூஸ் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், மூட் லேம்ப், சென்சார் உடன் ஸ்மார்ட் கீ வசதி, 16-இன்ச் அலாய் வீல், ரூஃப் ரெயில், பின்புற வைப்பர் உடன் வாஷர் மற்றும் டிஃபோகர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
புதிய HTK+ (O) வேரியண்டில் 17-இன்ச் அலாய் வீல்கள், ஹெட்லைட்களில் தொடர்ச்சியான எல்இடி விளக்குகள், பார்சல் டிரே, செயற்கை லெதேரேட் அப்ஹோல்ஸ்டர்டு கியர் நாப் உள்ளிட்டவற்றுடன் ஸ்மார்ட் கீ மோஷன் சென்சார் பெற்றுள்ளது.
2025 Kia Seltos Price list
Engine | Transmission | Variant | Price |
Smartstream G1.5 | 6 MT | HTE (O) | 11,12,900 |
HTK | 12,57,900 | ||
HTK (O) | 12,99,900 | ||
HTK+ (O) | 14,39,900 | ||
HTX | 15,75,900 | ||
HTX (O) | 16,70,900 | ||
IVT | HTK+ (O) | 15,75,900 | |
HTX | 17,20,900 | ||
HTX (O) | 18,06,900 | ||
Smartstream G1.5T-GDI | 6 iMT | HTK+ | 15,77,900 |
7DCT | GTX+ | 19,99,900 | |
GTX+ DT | 20,19,900 | ||
X-Line | 20,50,900 | ||
D1.5 CRDi VGT | 6 MT | HTE (O) | 12,70,900 |
HTK | 14,05,900 | ||
HTK (O) | 14,55,900 | ||
HTK+ (O) | 15,95,900 | ||
HTX | 17,32,900 | ||
HTX (O) | 18,35,900 | ||
6 AT | HTK+ (O) | 17,21,900 | |
HTX | 18,64,900 | ||
GTX+ | 19,99,900 | ||
GTX+ DT | 20,19,900 | ||
X-Line | 20,50,900 |
(ex-showroom)