Parade 2025 Date and Time: பிப்ரவரி 28, 2025 அன்று கிரக அணிவகுப்பு என்று அழைக்கப்படும் ஒரு அசாதாரண வானியல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அப்பொழுது நமது சூரிய மண்டலத்தின் ஏழு கிரகங்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஒரே நேர்கோட்டில் இணையும். இந்த அரிய வானியல் நிகழ்வு காண பொன்னான வாய்ப்பு அமைந்துள்ளது.
கோள்கள் அணிவகுப்பு விவரம்
சூரிய மண்டலத்தின் ஏற்படும் அதிசயம் என்ன? கிரக அணிவகுப்பை எப்படி பார்ப்பது? இந்தியாவில் கோள்களின் அணிவகுப்பு தெரியும்? கிரக அணிவகுப்பு எப்பொழுது நிகழும்? போன்ற விவரங்களை பார்ப்போம்.
கிரக அணிவகுப்பு என்றால் என்ன?
பல கிரகங்களின் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து இருக்கும் காட்சியை கிரக அணிவகுப்பு ஆகும். இது பார்ப்பதற்கு அற்புதமான காட்சியாக இருக்கும். கிரக அணிவகுப்பு என்பது பொதுவானவை என்றாலும், ஒரே நேரத்தில் ஏழு கிரகங்கள் அணிவகுத்து இருப்பது மிகவும் அரிதானது.
கிரக அணிவகுப்பு எப்பொழுது காட்சியளிக்கும்?
பிப்ரவரி 28 அன்று ஏழு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் காட்சி அளிக்கும் வானியல் அரிய நிகழ்வை காணலாம். மேலும் பூமிக்கு அருகில் இருக்கும் புதன் கோளும் இந்த அறிய நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கும். பொதுவாக சூரியனுக்கு அருகில் இருப்பதால் பகலில் கவனிக்க கடினமாக இருக்கும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நன்றாக தெரியும். எனவே ஏழு கிரகங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.
கோள்கள் அணிவகுப்பை நேரடியாக பார்க்க முடியுமா?
வீனஸ்: மாலை வானத்தில் பிரகாசமாகவும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தெரியும்.
செவ்வாய்: பூமிக்கு எதிரான கோட்டில் பயணிப்பதால், கடந்த ஜனவரி 2025 முதல் வானத்தில் நான்றாக தெரிகிறது.
வியாழன் மற்றும் சனி: வெறும் கண்ணால் பார்க்க முடியும்
யுரேனஸ் மற்றும் நெப்டியூன்: வெறும் கண்களால் கண்டறிவது கடினம். தொலைநோக்கிகள் மூலம் பார்ப்பது சிறந்தது.
கோள்கள் அணிவகுப்பை எப்படிப் பார்ப்பது?
இருண்ட இடத்தை நோக்கி செல்லுங்கள். உங்கள் பக்கத்தில் குறிப்பிட்ட தூரம் வரை ஒளி இருக்கக்கூடாது. வானிலை தெளிவாக இருக்க வேண்டும். மேற்கில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, பார்க்கத் தொடங்குங்கள். பெரும்பாலான கோள்களை எந்தவித உதவியின்றி நேரடியாக பார்க்க முடியும் என்றாலும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை பார்க்க தொலைநோக்கிகள் அவசியம்.
அடுத்த கோள்கள் அணிவகுப்பு எப்பொழுது நடைபெறும்?
பிப்ரவரி 28, 2025 அன்று நடைபெறும் கோள் அணிவகுப்பின் அரிய நிகழ்வு நமக்கு அதிசயத்தை கொடுக்கப்போகிறது. ஒரு அற்புதமான வான நிகழ்வைக் காண வாய்ப்பு உள்ளது. சரியாக திட்டமிட்டு தேவையான உபகரணங்களை வைத்துக்கொள்ளுங்கள். இந்தமுறை தவறவிட்டால், அதன்பிறகு 2040 ஆம் ஆண்டு தான் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். அதாவது இந்த ஏழு கிரக அணிவகுப்பு மீண்டும் 2040 தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.